திண்டுக்கல் மாவட்ட போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானாவில் தொடங்கிய பேரணியை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அப்போது, சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினார். தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்தார். மேலும், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், காவல் துறை சார்பில் 50 பேருக்கு புதிய தலைக்கவசம் வழங்கப்பட்டன.திண்டுக்கல்லில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணி ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரம், ஆயக்குடி வழியாகச் சென்று பழநி மயில் ரவுண்டானாவில் நிறைவடைந்தது. இந்த பேரணியின் போது, சாலை பாதுகாப்பு விதிகள், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இதை தொடர்ந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் உயிரிழப்புகளையும் விபத்துகளையும் தவிர்க்கலாம் என்றும் போலீசார் வலியுறுத்தினர்.
திண்டுக்கல்லில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்.
திண்டுக்கல்லில் சாலை விதிகளைப் பின்பற்றி தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
