கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கவின். இவர் அழகப்பபுரம் பேரூராட்சியில் தற்காலிக மின் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சைரஸ் என்பவர் குளங்களில் உள்ள தாமரை மலர்களைப் பறிப்பதற்காக மின் விளக்குகளை அணைக்குமாறு கவினிடம் கேட்டுள்ளார். இதற்கு கவின் மறுத்ததால் அவர்களுக்கிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கவின் மீன் கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆயுதங்களுடன் வந்த சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் கவினைத் தாக்கி உள்ளனர். இதில் கத்தியால் குத்தப்பட்ட கவின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மேலும், இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சைரஸ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாமரை மலர்களைத் திருட உதவாததால் பேரூராட்சி ஊழியர் கொலை – 4 பேர் கைது
தாமரை மலர்களைத் திருட உதவ மறுத்த பேரூராட்சி ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சைரஸ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாமரை மலர்களைத் திருட உதவ மறுத்த பேரூராட்சி ஊழியர் கவினை, சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக போலீசார் 4 பேரைக் கைது செய்தனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




