தென்காசி மாவட்டம் சிவகிரியில், கோயில் கொடைவிழாவின் போது கணவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தனது இரு குழந்தைகளுக்கு தீ வைத்து கொலை செய்துவிட்டு, தானும் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில், மதுவுக்கு அடிமையான கணவர்களால் பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் நடைபெறும் கொலைகள், தற்கொலைகள் மற்றும் சமூக மோதல்களுக்கு மதுபழக்கம் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மதுபழக்கம் இளைஞர்களின் வாழ்க்கையையும் குடும்பங்களையும் பாதிப்பதாக கூறியுள்ள ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு தான் உறுதியாக ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த ஆதரவு – ஸ்ரீதர் வேம்பு
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதை உறுதியாக ஆதரிப்பதாக ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதை உறுதியாக ஆதரிப்பதாக ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். மதுபழக்கம் குடும்ப வன்முறை, கொலை மற்றும் தற்கொலை போன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாக கூறிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




