மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக டாஸ்மாக் ஊழியர் மீது சமூக வலைதளத்தில் வெளியான புகாருக்கு அமைச்சர் விக்னேஷ் பதிலளித்துள்ளார்.மதுபான துறையில் முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் புகார் அளித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக வலைதளப் பயனர் ஒருவர் வெளியிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ், சம்பந்தப்பட்ட முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, புகாருக்கு அமைச்சர் நேரடியாக பதிலளித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்திருப்பது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
டாஸ்மாக் முறைகேடு புகார் - அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை
மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் இருவர் மீது வழக்கு, ஒருவர் தற்காலிக பணிநீக்கம் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
மது பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக சமூக வலைதளத்தில் வெளியான புகாருக்கு அமைச்சர் விக்னேஷ் பதிலளித்துள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
