டெல்லியின் சீமாபுரி பகுதியில் 3 மாடி கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டமான நிலையில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர், இடிபாடுகளை அகற்றி சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இடிபாடுகளில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தெற்கு டெல்லியின் சத்ய நிகேதன் பகுதியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்திருந்தனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி முழுவதும் பாதுகாப்பற்ற மற்றும் பராமரிப்பின்றி இருந்த கட்டடங்கள் தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில், சீமாபுரியில் மீண்டும் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து
டெல்லியின் சீமாபுரி பகுதியில் 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சீமாபுரி பகுதியில் 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மீட்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




