சென்னையில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ. 3,108 கோடி மதிப்பிலான ரிங் மெயின் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டியுள்ளார்.சோழிங்கநல்லூரில் தொடங்கப்பட உள்ள இந்தத் திட்டத்தின் கீழ், சுமார் 98 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சென்னையின் ஒன்பது முக்கிய குடிநீர் ஆதாரங்கள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.ஒரு பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டால், மற்ற பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களிலிருந்து தேவையான இடங்களுக்கு தண்ணீரை மாற்றி விநியோகிக்க இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், சென்னையின் குடிநீர் விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தொடர்ந்து, திட்டப் பணிகள் நிறைவடைந்த பிறகு, குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் தடைகளைக் குறைத்து, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் எதிர்கால குடிநீர் தேவையைச் சமாளிப்பதிலும் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் எனக் கூறப்படுகிறது.
சென்னைக்கு ரூ. 3,108 கோடியில் குடிநீர் திட்டம் - முதலமைச்சர் விஜய் அடிக்கல்
சென்னையில் ரூ.3,108 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் ரூ.3,108 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார். 98 கி.மீ. நீளக் குழாய்கள் அமைத்து, ஒன்பது குடிநீர் ஆதாரங்களை ஒருங்கிணைத்து சீரான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
