உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கப்பல் அதிகாரியான சவுரப் ராஜ்புத்தை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் கள்ளக்காதலன் சாஹில் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2025 மார்ச் மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரக் கொலையில், சவுரப்புக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து, பின்னர் அவரைக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொடர்ந்து, உடலைத் துண்டு துண்டாக வெட்டி நீல நிற டிரம்மில் போட்டு, சிமென்ட் கலவையால் மூடபட்டது தெரிய வந்தது. இந்நிலையில், சவுரப்பைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, முஸ்கான் மற்றும் சாஹில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து, நீதிபதி அரவிந்த் குமார் மிஸ்ரா இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கணவரை கொன்று டிரம்மில் அடைத்த மனைவிக்கு மரண தண்டனை
மீரட்டில் கணவரைக் கொன்று டிரம்மில் அடைத்த மனைவி முஸ்கான், கள்ளக்காதலன் சாஹில் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில், கப்பல் அதிகாரியான சவுரப் ராஜ்புத்தை கொலை செய்த வழக்கில் அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் கள்ளக்காதலன் சாஹில் ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
