சென்னை பெருங்குடி கோவிந்தசாமி நகர் பகுதியில் தங்கியிருந்த நேபாள இளைஞர்கள் சிலர் சீட்டு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பணம் தொடர்பாக கணேஷ் என்பவருக்கும், ஓட்டல் ஊழியரான கவுரவ் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு முற்றியதில் கோபமடைந்த கவுரவ் கத்தியால் கணேஷை தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த கணேஷ் மருத்துவமனைக்கு கொன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த துரைப்பாக்கம் போலீசார், தலைமறைவான கவுரவைத் தேடி வந்தனர். அவர் இரயிலில் தப்பிச் சென்றதைத் தொடர்ந்து, விஜயவாடா இரயில் நிலையத்தில் இரயில்வே போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் கவுரவிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சூதாட்ட தகராறில் நேபாள வாலிபர் குத்திக்கொலை
பெருங்குடி பகுதியில் சூதாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெருங்குடி பகுதியில் சூதாட்டத்தின்போது ஏற்பட்ட தகராறில் நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




