தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வடக்கு சத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் காலிப்பாண்டி. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், மாரியம்மாள் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கும்மி நிகழ்ச்சியை குழந்தைகளுடன் பார்த்துக் கொண்டிருந்ததார். அப்போது அங்கு வந்த காலிப்பாண்டி மதுபோதையில் இருந்ததால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனமுடைந்த மாரியம்மாள், குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். பின்னர், வீட்டுக்குள் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது மாரியம்மாள் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும், அவரது இரண்டு குழந்தைகளும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடியுள்ளனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தைகளை மீட்டு முதலில் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி கபினேஸ்வரன் மற்றும் ராபினேஸ்வரன் ஆகிய இரு சிறுவர்களும் செவ்வாய்க்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, மாரியம்மாளின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, காலிப்பாண்டிக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி அருகே மது போதையில் கணவர் தகராறு - மனைவி 2 குழந்தைகள் பலி
சிவகிரி அருகே குடும்பத் தகராறில் தாய் மற்றும் 2 குழந்தைகள் தீக்குளித்து உயிரிழப்பு. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி அருகே குடும்பத் தகராறில் தாய், 2 குழந்தைகள் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுப்பழக்கம் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




