கோவில்பாளையம் அருகே உள்ள சோதனை சாவடியில் இன்று காலை போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனைக்காக வெள்ளை நிற காரை நிறுத்த முயன்றபோது, காரில் இருந்த கும்பல் நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றது. இந்நிலையில் மப்டி பணியில் இருந்த காவலர் ஒருவர், தப்பிச் சென்ற காரை பிடிக்கும் முயற்சியில் அதன் மேற்கூரை மீது ஏறியுள்ளார். ஆனால் காரில் இருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து வேகமாக சென்றுள்ளனர். இதனால், உயிரைப் பொருட்படுத்தாமல் காரின் மேற்கூரை மீது படுத்தபடி காவலர் பயணித்துள்ளார். அந்த கார் அவிநாசி மெயின் ரோடு வழியாகச் சென்று, கணியூர் டோல்கேட்டையும் கடந்து சென்றது. இதையடுத்து, 45 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த பரபரப்பான துரத்தல் சம்பவம் சினிமா காட்சியைப் போல் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், அவிநாசி பகுதியில் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் காரில் சோதனை நடத்தியபோது, அதில் சுமார் 300 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களுடன் இருந்த ஒருவர் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவரை பிடிக்கும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, எங்கு கொண்டு செல்லப்பட்டது, இதன் பின்னணியில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர், தப்பிச் சென்ற காரை துணிச்சலுடன் துரத்தி, ஆபத்தான சூழ்நிலையிலும் தனது கடமையை மேற்கொண்ட காவலரின் செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சக காவலர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சினிமாவை மிஞ்சிய சேஸிங் 45 கி.மீ. துரத்தி பிடித்த காவலர் 300 கிலோ குட்கா பறிமுதல்
நிற்காமல் சென்ற காரை மேற்கூரையில் படுத்தபடி 45 கி.மீ. துரத்தி பிடித்த காவலர் 300 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.
கோவில்பாளையம் சோதனைச் சாவடியில் நிற்காமல் தப்பிய காரை 45 கி.மீ. துரத்திச் சென்று அவிநாசியில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். காரில் 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர் தப்பியோடியுள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




