சென்னையில், சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்துள்ளனர்.சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும், சிறுமிகளுடன் வீரமணி நெருக்கமாக இருக்கும் காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்ட சாந்தி அவரது கணவர் மகேந்திர சிம்மன், ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, வீரமணி மீதான போக்சோ வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 3 சிறுமிகள் அந்த குழுவை சந்தித்து புகார் அளித்துள்ளனர். இதுவரை 15 சிறுமிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகள் தயக்கமின்றி முன்வந்து புகார் அளிக்குமாறு சிறப்பு புலனாய்வு குழு கேட்டுக்கொண்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 3 சிறுமிகள் புகார்
ஜெம் வீரமணி வழக்கில் மேலும் 3 சிறுமிகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார்
சென்னையில், சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீது மேலும் 3 சிறுமிகள் சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் அளித்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




