ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கூத்தனூர் ரோடு எஸ்ஆர்டி கார்டன் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பியபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படியில், சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை இரும்பு ராடால் உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, ரூ.30 ஆயிரம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சத்தியமங்கலத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் கொள்ளை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சத்தியமங்கலத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.30 ஆயிரம் பணம் கொள்ளை. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




