சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்தவர் பூவரசி. இவர், கணவரை பிரிந்து 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன், நன்மங்கலம் இந்திரா நகரைச் சேர்ந்த பெயின்டர் தமிழ்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்செல்வனும் இவர்களுடன் தங்கியிருந்தார். பூவரசியும், தமிழ்செல்வனும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, துாய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணுக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பூவரசியுடனும் தமிழ்ச்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்ற அவர், பூவரசியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது மகனை கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வன், சிறுவனை கொலை செய்து கட்டிலுக்கு அடியில் வைத்துள்ளேன் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பூவரசி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது குறித்து பூவரசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தமிழ்ச்செல்வனை தேடி வந்தனர். இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட தமிழ்ச்செல்வன் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உட்பட 3 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேட்டில் 9 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை
சென்னை கோயம்பேட்டில் 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த தமிழ்ச்செல்வனை போலீசார் கைது செய்தனர்
கோயம்பேட்டில் 9 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த தமிழ்ச்செல்வனை போலீசார் கிளாம்பாக்கத்தில் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளன.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்




