உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக் கொன்ற தொழிலாளி

கோவில்பட்டி அருகே நண்பர்கள் இடையே ஏற்பட்ட கேலி, கிண்டல் தகராறில் கோபமடைந்த தொழிலாளி, நண்பனை கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கேலி செய்ததால் ஏற்பட்ட தகராறில், நண்பனை கோடாரியால் வெட்டிக் கொன்ற சுமை தூக்கும் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொன்ற தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை காளிராஜ் தனது நண்பர்களுடன் திட்டங்குளம் தினசரி சந்தை வளாகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட கேலி, கிண்டல் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அவரது நண்பர் அயோத்தி, தான் மறைத்து வைத்திருந்த கோடாரியை எடுத்து காளிராஜை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காளிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அயோத்தி அங்கிருந்து தப்பியோடினார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், காளிராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய அயோத்தியைப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும்,இச்சம்பவத்தின் போது உடனிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை nadaththi9 வருகின்றனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
கேலி செய்த நண்பனை கோடாரியால் வெட்டிக்கொன்ற தொழிலாளி | விசில் மீடியா