கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதையடுத்து, தேவராயபுரத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதை தொடர்ந்து, குப்பைகளை நான்கு வகையாக பிரித்து வழங்க வேண்டும் என்றும், முறையாக குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க வீடுகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, ஊராட்சியில் கடந்த இரண்டு மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை என்றும், குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிராமசபை கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு பிரச்சனை குறித்து பொதுமக்கள் புகார்
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் குடிநீர், தெருவிளக்கு பிரச்சனை குறித்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 10 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் தெருவிளக்குகள் எரியாதது, குடிநீர் முறையாக வழங்கப்படாதது, குப்பைகள் அகற்றப்படாதது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




