விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள வி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசாஸ்திரி. இவர் லாரி ஓட்டுநரான பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகள் விகாஷினி கரசானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டம், காரை கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த போது, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் விகாஷினிக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், பெற்றோர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விகாஷினியை வானூருக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை அறிவுரை கூறியுள்ளார். இதையடுத்து, மாணவி அந்த இளைஞருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் தந்தை மற்றும் மகள்கள் இருந்தபோது, மூத்த மகளை அருகிலுள்ள உறவினர் வீட்டில் தூங்க அனுப்பிவிட்டு, விகாஷினியிடம் காதல் விவகாரம் குறித்து சிவசாஸ்திரி பேசியுள்ளார். அப்போது காதலை கைவிட மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சிவசாஸ்திரி, தனது மகளின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் உதவியுடன் மாணவியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, சிவசாஸ்திரி வானூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலை கைவிட மறுத்த மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை
வானூர் அருகே காதல் விவகாரத்தில் 14 வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




