காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உப்பேரிக்குளம் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால், ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அய்யங்கார்குளம் ஊராட்சியில் பாலாற்றிலிருந்து வரும் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியின் கச்சிப்பட்டு காமராஜர் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மூன்று மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேரீஞ்சம்பாக்கம், வைப்பூர் பகுதிகளிலும் தட்டுப்பாடு நிலவுகிறது. உத்திரமேரூர் ஒன்றியம், ஆனம்பாக்கம் ஊராட்சியில் நான்கு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் பிரச்னை நீடிப்பதால், மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்துள்ள நிலையில், நீர்நிலைகளில் போதிய நீர் இல்லாதது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பழுதடைந்த குழாய்களைச் சீரமைத்து, மாற்று நீராதாரங்களை உருவாக்கி, குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் சாலைமறியல்
காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சாலைமறியல் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பல மாதங்களாக முறையாக குடிநீர் கிடைக்காத பகுதிகளில், பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
