விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி வி.வி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் சங்கர் குரு. இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவியும், சத்தியவாணி என்ற மகளும், சந்தோஷ் என்ற மகனும் உள்ளனர்.சங்கர் குரு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் 2022-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர். இதையடுத்து. சங்கர் குருவின் மதுப்பழக்கம் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், அதிகாலையில் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த சங்கரேஸ்வரி, கணவர் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் சங்கர் குரு சமையலறைக்குச் சென்ற போது, கியாஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. தீ அருகிலிருந்த இரண்டு வீடுகளுக்கும் பரவி, மொத்தம் மூன்று வீடுகள் சேதமடைந்தன. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சங்கர் குருவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, சங்கரேஸ்வரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், இச்சமபவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரை மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவி
விருதுநகரில் கணவரைத் தீ வைத்து கொன்றதாக மனைவி சரணடைந்தார். சிலிண்டர் வெடித்ததில் அருகிலிருந்த வீடுகளும் சேதமடைந்தன.
விருதுநகரில் குடும்பத் தகராறில் கணவர் சங்கர் குருவை மண்எண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொன்றதாக மனைவி சங்கரேஸ்வரி சரணடைந்தார். தீ விபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து அருகிலிருந்த வீடுகளும் சேதமடைந்தன
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




