தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுடர்மணி. இவர் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டில் சாக்குப்பையை அகற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு இருந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதையடுத்து, சுடர்மணி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தென்காசி மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பிரேமலதா, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில், நோயாளியின் நிலை குறித்து முறையாக மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்காததாகக் கூறப்படும் இரண்டு செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து, கடையநல்லூர் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையநல்லூரில் பாம்பு கடித்து ஒருவர் பலி
கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் பகுதியில் பாம்பு கடித்து முறுக்கு வியாபாரி உயிரிழந்துள்ளார்.
கடையநல்லூரில் பாம்பு கடித்து உயிரிழந்த வியாபாரிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனப் புகார் எழுந்ததால், 2 செவிலியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
