கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவரது மனைவி கண்மணி. இவர் ஒறையூர் ஊராட்சியில் விபி-ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 125 நாள் வேலைத் திட்டத்தில் பணிதள பொறுப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அதே ஊராட்சியில் ஊராட்சி எழுத்தராகப் பணிபுரியும் அருள் என்பவருக்கும் கண்மணிக்கும் இடையே வேலை வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இருதரப்பினரும் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து விசாரணைக்காக கண்மணியின் கணவர் லட்சாதிபதியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதையறிந்த கண்மணி, கணவரை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்திற்கு வந்தார். அப்போது திடீரென தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
கடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண்
கடலூர் அருகே கணவரை விடுவிக்கக் கோரி புதுப்பேட்டை காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட கணவரை விடுவிக்கக் கோரி வந்த கண்மணி, திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
