உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

இடி, மின்னல் பாதிப்புகளால் 14 பேர் உயிரிழப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் இடி, மின்னல் பாதிப்புகளால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இடி, மின்னல் பாதிப்புகளால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
இடி, மின்னல் பாதிப்புகளால் 14 பேர் உயிரிழப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் இடி, மின்னல் பாதிப்புகளால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய பேருந்தின் ஓட்டுநர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் பேருந்தின் நடத்துநருக்குக் கை முறிவு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் திடீரென கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இதற்கிடையே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 3,500 ஏக்கர் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. பயிர்ச் சேதங்கள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50
இடி, மின்னல் பாதிப்புகளால் 14 பேர் உயிரிழப்பு – அமைச்சர் செங்கோட்டையன் | விசில் மீடியா