உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

6 வயது மகனை கிணற்றில் வீசிய தந்தை கைது

செஞ்சி அருகே குடும்பத் தகராறில் 6 வயது மகனை கிணற்றில் வீசிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக 6 வயது மகனை கிணற்றில் வீசிய தந்தை கைது செய்யப்பட்டார். சிறுவனை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
6 வயது மகனை கிணற்றில் வீசிய தந்தை கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி தேவி. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், சஞ்சய் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடன் வாங்கிய பணத்தை செலவு செய்தது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்த நிலையில், கோபமடைந்த செல்வராஜ் தனது மகன் சஞ்சயை அருகிலுள்ள விவசாயக் கிணற்றில் தூக்கி வீசியுள்ளார். இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து, 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவனை சடலமாக மீட்டனர். இதையடுத்து, சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை செல்வராஜை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50