கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, எள்ளேரியைச் சேர்ந்தவர் பரத்சூர்யா. இவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர், காரைக்குடியைச் சேர்ந்த அபிராஜிடம் சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 7 லட்சம் பணம் பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரில் கிடைத்த வேலை திருப்திகரமாக இல்லாததால் நாடு திரும்பிய அபிராஜ் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது, பரத் சூர்யாவின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அவரை குண்டுகட்டாக தூக்கி காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மணமேல்குடி காவல் நிலையத்தில் சரணடைந்த அபிராஜ், அவரது தந்தை சுப்பிரமணியம், பிரபு, கணேசன் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் காளீஸ்வரன் என்பவர் த.வெ.க. நிர்வாகி என தெரிய வந்துள்ளது.
வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி - த.வெ.க. நிர்வாகி உட்பட 7 பேர் கைது
வேலை வாங்கித் தருவதாக ரூ.7 லட்சம் மோசடி வெளிநாட்டு வேலை ஏஜெண்ட் கடத்தல் த.வெ.க. நிர்வாகி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஏஜெண்டை வீடு புகுந்து கடத்திச் சென்ற வழக்கில் த.வெ.க. நிர்வாகி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




