திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பகல் நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, குற்றப்பிரிவு போலீசாரான கார்த்திக்ராஜன், மோரிஸ் ஜோசப் ராஜ், காங்குமணி ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதை தொடர்ந்து, திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கோயம்புத்தூரைச் சேர்ந்த முகமது அலி மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு – இருவர் கைது
தருமத்துப்பட்டி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய கோவையை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், தருமத்துப்பட்டி பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற இரண்டு நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




