திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே எரியோடு நல்லமன்னார்கோட்டை மாரம்பாடி பகுதியில், கத்தியை காட்டி லாரி ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் கும்பல் நடமாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த 4 பேர், வாள் மற்றும் கத்திகளைக் காட்டி லாரியை வழிமறித்து ஒட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டினர். பின்னர்,போலீசாரைக் கண்டதும் ஒருவர் தப்பியோடினார். இந்நிலையில், மற்ற 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சிவசூர்யா, ஸ்டேனிஸ், எரியோடு நாயக்கனூரை சேர்ந்த முத்துப்பாண்டி என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 2 வாள் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
லாரி ஓட்டுநர்களிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற மூவர் கைது
திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கத்தியை காட்டி லாரி டிரைவரிடம் பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து, வாள் கத்திகளை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே கத்தியை காட்டி லாரி டிரைவர்களிடம் பணம் பறிக்க முயன்ற கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டு, 2 வாள் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




