சென்னை மேடவாக்கம் பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வெள்ளக்கல் சுடுகாடு அருகே நீண்ட நேரமாக இருசக்கர வாகனத்துடன் நின்றிருந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நண்பருக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரது இருசக்கர வாகனத்தைச் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் தடை செய்யப்பட்ட போதை தரும் 300 மாத்திரைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.இதில் அவர் கோவிலம்பாக்கம் காந்தி நகர் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன, யாருக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேடவாக்கத்தில் போதை மாத்திரைகள் கடத்திய இளைஞர் கைது - 300 போதை மாத்திரைகள் பறிமுதல்
மேடவாக்கத்தில் இளைஞரிடம் இருந்து 300 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேடவாக்கம் வெள்ளக்கல் சுடுகாடு அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரின் இருசக்கர வாகனத்தில் 300 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




