உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

முதுமலை சாலையில் உலா வந்த புலி - வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரி முதுமலை வனப்பகுதி சாலையோரத்தில் தண்ணீர் குடித்த புலி கம்பீரமாக சாலையைக் கடந்தது. இதை கண்டு வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி முதுமலை வனப்பகுதி சாலையோரத்தில் தண்ணீர் குடித்த புலி கம்பீரமாக சாலையைக் கடந்தது. அதே நேரத்தில் மயிலும் சாலையைக் கடந்த அரிய காட்சியை சுற்றுலா பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். வனத்துறையினர் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
முதுமலை சாலையில் உலா வந்த புலி -  வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மசினகுடி, மாயார் வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில், இன்று உதகையிலிருந்து முதுமலை செல்லும் வனப்பகுதி சாலையோரத்தில் தேங்கியிருந்த நீரில் புலி ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் தங்களது வாகனங்களை தொலைவிலேயே நிறுத்தினர். பின்னர் தண்ணீர் குடித்து முடித்த புலி மெதுவாக நடந்து சாலையைக் கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதே நேரத்தில் சாலையின் மறுபுறத்திலிருந்து மயில் ஒன்றும் சாலையைக் கடந்து சென்றது. இந்த அரிய காட்சியை சுற்றுலா பயணிகள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, வனப்பகுதி சாலைகளில் வனவிலங்குகளைக் கண்டால் வாகனங்களை விட்டு கீழே இறங்கவோ, ஒலிப்பான் அடிக்கவோ, கேமரா பிளாஷ் பயன்படுத்தவோ கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 
 

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50