கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச் சாட்டு எழுந்த போதே விசாரணை நடத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்போது இந்த விவகாரத்தை அரசியல் செய்வதாகக் கூறி விமர்சித்தவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல் துறையில் புகார் அளித்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரைப் பாராட்டியுள்ளார். பணியிடங்களில் அத்து மீறல்களைச் சகித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அவர் முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் விஜய் காலம் தாழ்த்துவது ஏன் என்றும், இனியாவது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை - கனிமொழி எம்.பி. விமர்சனம்
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசை கனிமொழி எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசை கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




