மதுரை மாவட்டம் விராதனூர் பகுதியில் உள்ள சத்யாநகர் அருகே நேற்று இரவு தினேஷ் மற்றும் சந்தோஷ்குமார் ஆகிய இரு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த கும்பல் இருசக்கர வாகனத்தை பின் தொடர்ந்து வந்தது. இதையடுத்து, சாலையில் வேகமா சென்ற இருசக்கர வாகனம் மீது காரை வைத்து அந்த கும்பல் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தினேஷ், சந்தோஷ் குமார் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது, காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய கும்பல், இளைஞசர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் குமார் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, தினேஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மேலும், இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய தினேஷை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து, சந்தோஷ் குமார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்துள்ளனர். மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




