உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மதுபானக் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

மதுபான ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.16,800 கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுபானக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 8.33% போனஸ், 11.67% கருணைத் தொகை என மொத்தம் 20% போனஸ் வழங்க அரசு அறிவித்துள்ளது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மதுபானக் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் -  தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் மதுபானக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுபானக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 8.33 சதவீதம் போனஸ் தொகையும், 11.67 சதவீதம் கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 20 சதவீதம் வழங்கப்பட உள்ளது.இந்த போனஸ் தொகை 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான ஓராண்டு கால ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. போனஸ் கணக்கீட்டிற்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.7,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, தகுதியுள்ள பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 கிடைக்கும். இதற்கான நிதி இன்று மாவட்ட மேலாளர்களின் செயல்பாட்டுக் கணக்குகளுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், நிதி கிடைத்தவுடன் எவ்வித தாமதமுமின்றி ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக போனஸ் தொகையைச் செலுத்தி, உரிய ரசீதுகளைப் பெறவும் அரசு அறிவுறுத்தியுள்ளது

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50