சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் முகமது சதாம் உசேன். இவர் மீது கொலை, அடிதடி, திருட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கஞ்சா விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததால் இரண்டு வழக்குகளில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில், கரசங்கால் காட்டுப்பகுதியில் அவர் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் அதிகாலை அங்கு சென்ற தனிப்படை போலீசார் சதாம் உசேனை சுற்றிவளைத்தனர். அப்போது அவர் பட்டாக் கத்தியால் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எச்சரிக்கையை மீறி தப்பியோட முயன்றதால் தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் அவரது காலில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த சதாம் உசேன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா, 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 3 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரை தாக்க முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு - 20 கிலோ கஞ்சா, 4 நாட்டு வெடிகுண்டு, 3 பட்டாக் கத்திகள் பறிமுதல்
தாம்பரத்தில் போலீசாரை தாக்க முயன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு, ,20 கிலோ கஞ்சா, 4 நாட்டு வெடிகுண்டு, 3 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
தாம்பரம் அருகே போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி சதாம் உசேன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி சுட்டுப்பிடித்தனர். அவரிடமிருந்து கஞ்சா, நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




