கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெத்த ஏலசகிரி மகேஷ் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயராம், சூளகிரி பகுதியில் கல்வித்துறையில் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் சில ஆண்டுகளாக ஜெயராம் தகாத முறையில் பேசி பாலியல் ரீதியாக வற்புறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் மகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, தனது விருப்பத்திற்கு இணங்காவிட்டால் சிறுமியை பள்ளித் தேர்வு எழுத விடாமல் தடுப்பதாகவும் அவரது சகோதரரை பொதுத்தேர்வு எழுத விடாமல் செய்வதாகவும் மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி, நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் ஜெயராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – கல்வித்துறை பயிற்சியாளர் போக்சோவில் கைது
ஓசூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வித்துறை பயிற்சியாளர் ஜெயராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சூளகிரி கல்வித்துறை பயிற்சியாளர் ஜெயராம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ள நிலையில், ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




