கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பன்னந்தூர் தர்மதோப்பு பகுதியில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த சாமுண்டீஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது கண்களில் காயங்கள் இருந்ததுடன், ஆடைகளும் கிழிந்த நிலையில் காணப்பட்டதால், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, நள்ளிரவு நேரத்தில் மூதாட்டியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததாகக் கூறப்படும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சூரியகுமார் என்பவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூதாட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி அருகே மூதாட்டி மர்ம மரணம் - மர்ம நபருக்கு போலீசார் வலை
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போச்சம்பள்ளி அருகே 71 வயது மூதாட்டி மர்ம மரணம். பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




