உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

பெங்களூருவில் இருந்து 300 கிலோ குட்கா கடத்தல் - இருவர் கைது

பேரிகையில் 300 கிலோ குட்கா கடத்திய இருவரை 10 கி.மீ துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே போலீசாரின் வாகன சோதனையின்போது நிற்காமல் தப்பிச் சென்ற குட்கா கடத்தல் கும்பலை, சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
பெங்களூருவில் இருந்து 300 கிலோ குட்கா கடத்தல் -  இருவர் கைது

பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் குட்கா கடத்திச் செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் பேரிகை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன், உதவி ஆய்வாளர் வினோத் மற்றும் போலீசார் பேரிகை - சூளகிரி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், காரை நிறுத்தாமல் போலீசார் மீது மோதுவது போல் ஓட்டிச் சென்ற கடத்தல் காரர்கள் தப்பியோடினர். இதில் போலீசார் நூலிழையில் உயிர் தப்பினர். இதையடுத்து காரை விரட்டிச் சென்ற போலீசார், 10 கிலோ மீட்டர் தொலைவில் அத்திமுகம் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்த காரைப் பிடித்தனர். பின்னர், காரில் இருந்த இருவரும் தப்பியோட முயன்ற போது போலீசார் அவர்களை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஈத்தேஷ் விஜய்பால் என்பதும், காரில் 300 கிலோ குட்கா கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. பின்னர். இருவரையும் கைது செய்த போலீசார் ஓசூர் கிளைச் சிறையில் அடைத்தனர். 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50