புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் உப்பளம் கல்லறை அருகே வாணரப்பேட்டை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே பறிதாபகமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார் பேட்டை போலீசார், உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களைச் சேகரித்தனர்.இந்தக் கொலை முன்விரோதம் காரணமாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, உயிரிழந்தவரின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் இளைஞர் வெட்டிப் படுகொலை – உறவினர்கள் போராட்டம்
புதுச்சேரியில் இளைஞர் மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
புதுச்சேரி வாணரப்பேட்டையில் தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




