சென்னையில் திருத்திய பள்ளி கால அட்டவணையை வெளியிட்ட அமைச்சர் ராஜ்மோகன், இனி பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இது குறித்து அவர் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இருந்த விளையாட்டு வகுப்புகள் தற்போது 5 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறினார். இதை தொடர்ந்து, விளையாட்டு வகுப்புகளை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது என்றும், மாணவர்களை விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், பள்ளிகளில் விளையாடும்போது எந்தக் குழந்தையையும் சாதி, மதம், நிறம் போன்ற காரணங்களால் ஒதுக்கி வைக்கக்கூடாது என வலியுறுத்தினார். அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கூறினார். இதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டு வகுப்புகள் - அமைச்சர் ராஜ்மோகன்
பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.
பள்ளிகளில் இனி வாரத்தில் 5 நாட்களும் விளையாட்டு வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். மாணவர்களிடையே பாகுபாடு காட்டாமல், விளையாட்டுகளை ஊக்குவித்து ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லும் வீரர்களை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




