தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருவேட்டநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனித்துரை. இவர் திருவேட்டநல்லூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் புளியங்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கொல்லம் – திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேகமாக கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சீனித்துரை தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர் போகும் வழியிலையே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும், கார் ஓட்டுநர் குறித்தும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடையநல்லூர் அருகே கார் இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் பலி
கடையநல்லூர் அருகே கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சீனித்துரை உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




