நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட புத்தூர்வயல் மற்றும் விமலகிரி குடியிருப்புப் பகுதிகளில், அதிகாலை நேரத்தில் காட்டு யானை ஒன்று சாலையில் சுற்றித்திரிந்துள்ளது. வனப்பகுதியிலிருந்து வெளியேறிய இந்த யானை, குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் புகுந்து கரும்புகளைப் பிடுங்கி சாப்பிட்டபடி சாலையில் உலா வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். மேலும், நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் மற்றும் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் யானையைக் கண்டு கவனமாகச் சென்றனர்.இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்தனர். தொடர்ந்து, யானையைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.குடியிருப்புப் பகுதிகளில் யானைகள் நுழைவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இதனால், வனத்துறையினர் உரிய கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கும்கி யானைகளின் உதவியுடன் காட்டு யானையை முதுமலை வனப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், யானைகளைக் கண்டால் அவற்றின் அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூரில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை
கூடலூரில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை கும்கி யானை உதவியுடன் முதுமலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளது.
கூடலூரில் குடியிருப்புப் பகுதியில் கரும்புகளை ருசித்தபடி சாலையில் உலா வந்த காட்டு யானையை, கும்கி யானைகள் உதவியுடன் முதுமலைக்கு அனுப்ப வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




