நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் ஜோயல் என்பவர் 25 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஜோயல், தன்னை இன்ஸ்பெக்டர் அழகர் பணிச்சுமை மற்றும் தொல்லையால் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகக் கூறி கமிஷனருக்கு ஆடியோ அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளப்பட்டதாகவும் தனது மரணத்துக்கு இன்ஸ்பெக்டர் மற்றும் சில போலீசார் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கமிஷனர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, காவலர் ஜோயலை சஸ்பெண்டு செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். பின்னர், குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலில் காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லையில் இன்ஸ்பெக்டர் டார்ச்சர் என ஆடியோ வெளியிட்ட காவலர் சஸ்பெண்ட்
நெல்லையில் இன்ஸ்பெக்டர் டார்ச்சர் என ஆடியோ வெளியிட்ட காவலர் சஸ்பெண்ட் .செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் இன்ஸ்பெக்டர் மீது டார்ச்சர் குற்றச்சாட்டு கூறி ஆடியோ வெளியிட்ட காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
