உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நாகையில் தண்ணீரின்றி கருகும் 2,500 ஏக்கர் சம்பா பயிர்கள் – நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்

நாகை கடைமடை பகுதிகளில் தண்ணீரின்றி 2,500 ஏக்கர் சம்பா பயிர்கள் கருகி வருவதால், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் பாலக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாமல் 2,500 ஏக்கருக்கும் அதிகமான சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நாகையில் தண்ணீரின்றி கருகும் 2,500 ஏக்கர் சம்பா பயிர்கள் – நிவாரணம் கோரி விவசாயிகள் போராட்டம்

நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் சம்பா நெற்பயிர்கள் கருகி வருகின்றன. குறிப்பாக பாலக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கர் விளைநிலங்கள் வறண்டு வெடித்துக் காணப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் கிடைக்காததாலும், பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும் விவசாயிகள் மழையை நம்பி நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். ஏற்கனவே ஒருமுறை விதைப்பு பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விதைப்பு செய்தும் தற்போது பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலக்குறிச்சி, இறையான்குடி, மடப்புரம், எட்டுக்குடி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாததால் டீசல் மோட்டார்கள் மூலமாகவும் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.எனவே, பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50