தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தலையில் பலத்த காயங்களுடன் அப்தவித் ரஹ்மத் என்பவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்திற்கு ஆரம்பத்தில் எந்தவிதமான துப்பும் கிடைக்காத நிலையில், போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை தொடர்ந்து ஆய்வு செய்தனர். மேலும், இச்சம்பவம் நடைபெற்றதாக கருதப்படும் நேரத்தில் அந்தப் பகுதியில் சென்ற வாடகை கார் ஒன்று போலீசாரின் கவனத்திற்கு வந்தது. அந்த காரை பின்தொடர்ந்து விசாரித்தபோது, அது ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தது என்றும், கார் ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தென்காசியைச் சேர்ந்த மகேஷ்குமார் என்பவர் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது.இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக பணியாற்றி வந்த மகேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உயிரிழந்த ரஹ்மத்தின் மனைவி கம்சா என்ற நிஷாவுக்கும் மகேஷ்குமாருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், இருவரும் சேர்ந்து வாழ்வதற்காக ரஹ்மத்தை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ஷட்டர் வேலை இருப்பதாகக் கூறி ரஹ்மத்தை மகேஷ்குமார் காரில் அழைத்துச் சென்று தோட்டத்திற்கு சென்றதாகவும், அங்கு வேலைக்காக அளவெடுக்கச் சென்றபோது பின்னால் இருந்து கிரைண்டர் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பின்னர் மகேஷ்குமார் மீண்டும் காரில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மகேஷ்குமார் மற்றும் ரஹ்மத்தின் மனைவி கம்சா என்ற நிஷா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூடுல்ஸ் கடையில் மலர்ந்த கள்ளக்காதல், கொலையில் முடிந்த சோகம்...
தென்காசியில் கணவர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது
தென்காசி அருகே தோட்டத்தில் அப்தவித் ரஹ்மத் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு துலக்கிய போலீசார், கொலைக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மனைவி நிஷா மற்றும் மகேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
