தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், அரூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த போராட்டத்தில், நிரந்தர தொழிலாளர்களுக்கான மருத்துவ விடுப்பு மற்றும் சரண் விடுப்பை பணமாக்கும் தொகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். பணிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்லவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. துாய்மை பணி ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில், தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், நேற்று வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார்.
தூய்மை பணியாளர் வேலை நிறுத்த போராட்டம்
ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்தக் கோரி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
அரூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




