தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி மேரி விஜிலா. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களது மகளும், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்பவரும் பழகி வந்துள்ளனர். இதை முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்கள் மீது ஞானப்பிரகாஷுக்கு கோபம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை முத்துகிருஷ்ணன் வீட்டுக்குள் நுழைந்த ஞானப்பிரகாஷ், அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஞானப்பிரகாஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துகிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா மற்றும் மகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், முத்துகிருஷ்ணனின் 2 மகள்களையும் மிரட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துவிட்டு ஞானப்பிரகாஷ் தப்பியோடிவிட்டார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தட்டார்மடம் போலீசார், காயமடைந்த தந்தை, மகனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஞானப்பிரகாஷின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பேரையும் மீட்டனர். இதை தொடர்ந்து, தப்பி ஓடிய ஞானப்பிரகாஷை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் காதல் விவகாரத்தில் வீடு புகுந்து பெண்ணின் தாய் கொலை - இளைஞர் கைது
சாத்தான்குளம் அருகே குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய இளைஞர், பெண்ணைக் கொலை செய்துவிட்டு இரு சிறுமிகளைக் கடத்திச் சென்றார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே குடும்பத்தினரை அரிவாளால் வெட்டிய இளைஞர், பெண்ணைக் கொலை செய்துவிட்டு இரு சிறுமிகளைக் கடத்திச் சென்றார். காயமடைந்த தந்தை, மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சிறுமிகளை மீட்டு, தப்பியோடிய இளைஞரைக் கைது செய்தனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




