தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, நல்லூர் இரயில்வே கேட் மேம்பாலம் அருகே சென்றபோது, இன்ஜினில் இருந்து தீப்பொறி கிளம்பியுள்ளது. இதையடுத்து, பேருந்தில் இருந்து புகை வெளியேறி, தீ மளமளவென பரவத் தொடங்கியது.இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தை சாலையோரம் நிறுத்தி, பயணிகளை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து, பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறினர்.இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் பேருந்து முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து குரும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஓடும் அரசுப் பேருந்தில் தீ விபத்து
திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்குச் சென்ற அரசுப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து நாசரேத்துக்குச் சென்ற அரசுப் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




