செங்கல்பட்டு மாவட்டம் வேட்டூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சாலையோரத்தில் அமைந்துள்ள மின்கம்பம், முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், பலத்த காற்று வீசும்போது சேதமடைந்த மின்கம்பம் சாலையில் சரிந்து விழும் அபாயம் இருப்பதால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, மின்கம்பம் சரிந்து விழுந்தால் உயிரிழப்பு அல்லது பெரும் விபத்து ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை ஆய்வு செய்து, சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, விபத்து ஏற்படும் முன்பே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை
செய்யூர் அருகே வேட்டூர் கிராமத்தில் சேதமடைந்த மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே வேட்டூர் கிராமத்தில், விளங்கனூர் செல்லும் சாலையோரத்தில் சேதமடைந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




