தமிழ்நாட்டில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார். 2027ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுகளுக்கான அட்டவணையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 அரியர் பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிளஸ்-2 செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. எஸ்.எஸ்.எல்.சி. செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தக் கல்வியாண்டில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுகளை எழுத உள்ளனர். தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் தங்களது பாடத்திட்டங்களைத் திட்டமிட்டு படிக்கத் தொடங்கலாம். தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - அமைச்சர் ராஜ்மோகன்
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
