போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியத் தலைவனாக கூறப்படும் நவ்ரீத் சிங், துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த கும்பலின் தலைவனான நவ்ரீத் சிங்கை இந்தியாவுக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்திருப்பது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய மைல்கல் என தெரிவித்துள்ளார்.மேலும், போலி அடையாளத்தை பயன்படுத்தி துருக்கி குடியுரிமை பெற்றிருந்ததாக கூறப்படும் நவ்ரீத் சிங், ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை இந்தியாவுக்கு கடத்தி வந்ததாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து, புலனாய்வு அமைப்புகள் அவரது உண்மையான அடையாளத்தை கண்டறிந்து, நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட நவ்ரீத் சிங், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
துருக்கியில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது - அமித் ஷா
துருக்கியில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் நவ்ரீத் சிங் இந்தியாவுக்கு நாடு கடத்தல் கைது செய்து சிறையில் அடைத்ததாக அமித் ஷா தகவல்.
துருக்கியில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் நவ்ரீத் சிங் இந்தியாவுக்கு நாடு கடத்தல் புலனாய்வு அமைப்புகளுக்கு அமித் ஷா பாராட்டு.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




