உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் அங்கு செல்ல முயன்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நெல்லையில் போலீசார் கைது செய்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக அங்கு செல்ல முயன்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நெல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கைது

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என பல்வேறு இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தமிழ்நாடு அரசு மேல் முறையீடு மற்றும் சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளது. இதை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் இன்று ஒரு நாள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது . இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் செல்லத் திட்டமிட்டிருந்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நெல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவரது பயணத்தைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50