திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாருக்கு இடையே பொதுவழி பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தகவலறிந்து வந்த போலீசார், இரு குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, தகராறு தொடர்பாக பள்ளி மாணவர் ஒருவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த மாணவரின் தாயார் காவல் நிலையம் சென்று பொதுவழித் தகராறில் தனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே, அவரை விடுவிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் கேட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவிட்டார். அந்த விசாரணையில், சிறப்பு உதவி ஆய்வாளர் மதியழகன் ரூ.10 ஆயிரம் கேட்டது உண்மை என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட மதியழகனை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டார்.
திருப்பத்தூரில் மாணவரை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
பள்ளி மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆம்பூர் அருகே மாணவரை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட சிறப்பு எஸ்.ஐ. மதியழகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். விசாரணையில் லஞ்சம் கேட்டது உறுதியானதை தொடர்ந்து எஸ்.பி. நடவடிக்கை எடுத்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
