திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் ஷ்யாம் பிரபாகர். இவர் பெயின்டிங் மற்றும் பாலிஷ் தொழில் செய்து வருகிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்று இரவு 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, எம்.ஜி.ஆர். மன்றம் அருகே சென்ற போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர், பிரபாகர் இருசக்கர வாகனத்தை வேகமா செல்ல முயற்சித்துள்ளார். இந்நிலையில் அந்த மர்ம கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஷ்யாம் பிரபாகர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இந்த தகவலறிந்த போலீசார் இச்சமபவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் ரவுடி வெட்டிப் படுகொலை
திருநெல்வேலியில் பிரபல ரவுடி ஷ்யாம் பிரபாகர் மூன்று பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பிரபல ரவுடி ஷ்யாம் பிரபாகர், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரால் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




